சென்னை: தர்மபுரியில் நேற்று முன்தினம் இரவு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. முதுகு தண்டு வலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயம் மற்றும் மூட்டு பிரச்னை காரணமாக ஜி.கே.மணி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதன் பிறகு வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் ஜி.கே.மணி சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது 2வது முறையாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
