×

பகவான் ராமருடன் ஒப்பிட்டு எனக்கு போஸ்டர் வைப்பதா? பாஜவினருக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:பகவான் ஸ்ரீராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்து வேதனை அடைந்தேன். இறை சக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.

சேது சமுத்திரம் விவகாரத்தில் ராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.

நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இதுபோல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Lord Rama ,Nainar Nagendran ,BJP ,Chennai ,Tamil Nadu ,Lord Sri Rama ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...