- உ.பி.
- கலெக்டர்
- லக்கிம்பூர்
- விபின்
- நௌசர் ஜோகி
- லக்கிம்பூர், உத்தரப் பிரதேசம்
- தலைமை மேம்பாட்டு அதிகாரி
- அபிஷேக் குமார்
- தலைமை மருத்துவ அதிகாரி
- டாக்டர்
- சந்தோஷ் குப்தா…
லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் நவுசர் ஜோகி கிராமத்தை சேர்ந்த விபின், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு பையுடன் வந்தார். அங்கு தலைமை மேம்பாட்டு அதிகாரி அபிஷேக் குமார் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்ற அவர் பையில் இருந்த தனது குழந்தையின் இறந்த கருவை காண்பித்தார்.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஹேவாகஞ்சில் உள்ள கோல்டர் மருத்துவமனையின் மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது குழந்தை கருவிலேயே இறந்ததாகவும் அந்த மருத்துவமனையில் தனது மனைவி ரூபி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் புகார் அளித்தார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைத்தது.
