×

சேரன்மகாதேவியில் பண்ணைய பயிற்சி முகாம் முருகையாபாண்டியன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

வீரவநல்லூர், டிச. 11:   சேரன்மகாதேவி வட்டார அட்மா திட்டத்தின் கீழ் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான பண்ணைய பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். முருகையா பாண்டியன் எம்எல்ஏ, முகாமை துவக்கிவைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் சுழற்கலப்பை, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள், பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு ரூ.5.32 லட்சத்தில் இடுபொருட்களும் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் முகமதுகாலித், தோட்டக்கலை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டங்கள்) சுந்தர் டேனியேல் பாலஸ், சேரன்மகாதேவி கால்நடைத்துறை உதவி இயக்குநர் ஆபிரகாம் ஜாப்ரி, வட்டார வேளாண் உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி, நகரச் செயலாளர் பழனிக்குமார், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் கூனியூர் மாடசாமி, அம்பை ஒன்றிய அதிமுக  செயலாளர் விஜயபாலாஜி, துணைச்செயலாளர் பிராங்கிளின், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், ஜெ.பேரவை பொறுப்பாளர் பீர்காதர், கூட்டுறவு வங்கி இயக்குநர் மகாராஜன், சொர்ணரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலர் வரதராஐன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி விதை அலுவலர்கள் சுரேஷ்குமார், சீனிவாசன், உதவி வேளாண் அலுவலர்கள் கணேசன், ஷேக் முகமதலி, கலா, கார்த்திகா, தமிழரசன் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் முத்துகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Tags : Murugayapandian MLA ,training camp ,Cheranmakhadevi ,
× RELATED குன்னூரில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு