சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நீதி, கண்ணியத்துக்கான போராட்டத்தை சுதாகர் ரெட்டியின் வாழ்க்கை நமக்கு தொடர்ந்து ஊக்குவிக்கும். சுதாகர் ரெட்டியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்,” இவ்வாறு தெரிவித்தார்.
