பெங்களூரு : தர்மஸ்தாலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் அளித்த கோயில் பணியாளரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. கோயில் நிர்வாகத்தால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைப்பு என கோயில் பணியாளர் புகார் அளித்திருந்தார். ஆனால், புகார்தாரர் கூறிய இடத்தில் அதிகமானோர் புதைக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
