×

போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது

திருப்பூர், ஆக.23: திருப்பூர் வீரபாண்டி குலத்தோட்டம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வீரபாண்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (22), மூவேந்திரன் (22), ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், போதை மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

Tags : Tiruppur ,Veerapandi Kulathottam ,Veerapandi ,Jeevanandam ,Moovendran… ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்