×

தனிநபர் இல்ல கழிவறை திட்டத்தில் மோசடி எறையூர் ஊராட்சி செயலாளர் மீது கலெக்டரிடம் புகார் மனு


பெரம்பலூர்,டிச.11: பெரம்பலூர் அருகே எறையூர் ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிவறை திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து ஒதுக்கீடு செய்த பணத்தை பெற்றுத்தர பயனாளிகள் கலெக்டரிடம் பு கார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் ஊரா ட்சியைச் சேர்ந்த தனிநபர் இல்லக் கழிவறை திட்டப் பயனாளிகள் கலெக்டர்  வெங்கடபிரியாவிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சி செயலாளராக உள்ள வெங்கடேஸ்வரி என்பவர் அரசின் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிய 17பேர் க ளுக்கு மானிய தொகை தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் பணத்தை பயனா ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எறையூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி பெயரில் தொ கையை வழங்கியதாக தெரிகிறது.

அந்த பணத்தை பெற்ற ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி பணத்தை பய னாளிகளான எங்களுக்கு வழங்காமல் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளார். எனவே தவறுதலாக பட்டியல் அனுமதித்த வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சி) மீதும், ரூ.2 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, இதுவரை பயனாளிகளுக்கு வழங்காமல் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட எறையூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுத்து தனிநபர் இல்லக் கழிவறை திட்ட மானியத் தொகையினை பெற்றுத் தரவேண்டும் எனத் தெரி வித்துள்ளனர். இதையடுத்து புகார் மனுமீது உரிய விசாரணை நடத்தி நடவடி க்கை எடுக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇ யக்குநர் லோகேஸ்வரிக்கு கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வி.களத்தூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது தொகுப்பு வீடு வழங்க லஞ்சமாக ஒவ்வொரு பயனாளியிடமும் ரூ.15 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகளாக வீடு ஒதுக்கீடு செய்யாததால் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2ம்தேதி ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Collector ,Panchayat Secretary ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...