×

மாட்டம்மை நோய்க்கு மருத்துவ முகாம்

பெரம்பலூர், டிச.11: பெரம்பலூர் மாவட்டத்தில் மாடுகளைத் தாக்கும் மாட்டம்மை எனப்படும் வைரஸ் நோய்க்கு சிறப்பு விழப்பு ணர்வு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் வெங்கட பிரியா தகவல் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் மாடுகளைத் தாக்கும் மர்ம நோயான லம்பி ஸ்கின் டிசீஸ் எனப்படும் தோல் நோய் பாதித்து வருவதாகவும். இது வரை 500மாடுகள் பாதிக்கப் பட்டிருப்ப தாகவும் நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர் ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் இன்று (11ம்தேதி) முதல் வரும் 31ம்தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட 40 கால்நடை மருத்துவக்குழுக்கள் அமை க்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் கால்நடைகளில் மாட்டம்மை அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் மற்றும் காய்ச்சல் தென்பட்டால் உரியசிகிச்சை வழங்கப்படவுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான மாடுகளிலிருந்து நோய்வாய்ப்பட்ட, பாதித்த மாடுகளை உடனனே தனி மைப்படுத்திட வேண்டும். கொசுக்கள், ஈக்கள், உண் ணி போன்ற கடிக்கும் பூச்சிகள் மாட்டம்மை வைரஸ் கிருமிகளை நல்ல மாடுக ளுக்குப் பரப்பும். எனவே தோல்நோய் பாதித்த இடங்களில் ஈக்கள் மொய்க்காம ல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாட்டுக் கொட்டகையில் பண்ணையில் கிருமி நாசி னிகள் தெளிக்கவேண்டும். கால்நடைகள் கட்டும் இட ங்களில் மாலை 6மணிய ளவில் நொச்சி இலை சரு குகள், வேப்பிலை சருகுக ளை கொண்டு புகைப்பிடி த்தால் கால்நடைகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்ப டுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : camp ,
× RELATED உத்தமபாளையம் வட்டாரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்