புவனேஸ்வர்: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும். அதைப்பின்பற்றி ஒடிசா மாநிலத்திலும் அரசு பஸ்களில் பள்ளி மாணவர்கள் இலவச பயணம் செய்ய முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தலைமையில் நடந்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி ஒடிசா மாநிலத்தின் பள்ளி மற்றும் பொதுக் கல்வி அமைச்சர் நித்யானந்தா கோண்ட் கூறுகையில்,’ அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ‘ முதல்வரின் பேருந்து சேவை’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்களில் இனிமேல் இலவசமாக பயணிக்கலாம். இந்த திட்டத்தின் அடிப்படையில் பஸ்சில் பயணம் செய்யும் போது மாணவர்கள் பள்ளி சீருடையில் இருக்க வேண்டும். உரிய அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அதே போல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்களை அரசே வழங்கும்’ என்றார்.
