புதுடெல்லி: நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவர் மீது ஏறி குதிப்பதற்கு முயன்ற நபரை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும் இந்த சம்பவம் நேற்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், நாடாளுமன்ற வளாகத்தை அணுகி உள்ளே ஏறி குதிக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் மீது ஏற முயற்சித்துள்ளார். எனினும் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்ப் மற்றும் டெல்லி காவல்துறை போலீசார் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் உள்ளூர் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் உத்தரப்பிரதேசத்தின் பதோஹியை சேர்ந்த ராம் குமார் பிந்த் என்பதும், அவர் குஜராத்தின் சூரத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிவதாக தெரிகிறது. மேலும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
