×

சென்னையின் பன்மைத்துவத்தை பாதுகாத்திடுவோம்! கனிமொழி எம்.பி சென்னை நாள் வாழ்த்து!

 

சென்னை: மெட்ராஸ் நகரம் 1639-ம் ஆண்டு ஆக.22-ம் தேதி உருவானது. இது சிங்கார சென்னையாக வளர்ந்து இன்றுபிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தைபிடித்திருக்கிறது. சென்னை உருவான ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்; ஆங்கிலேயர்கள் இந்த நகரை நிர்மாணித்திட ஒப்பந்தமிட்டு இன்றோடு 386 ஆண்டுகளாகிவிட்டன. உழைக்கும் மக்களால் உருவான மெட்ராஸ், சென்னை பெருநகரமாக வளம் பெற்று, இன்று கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கைக் கனவாக விரிந்து கிடக்கிறது. ஒற்றுமைக்கும் ஒன்றுபட்ட வளர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் நம் சென்னையின் பன்மைத்துவத்தை பாதுகாத்திடுவோம். சென்னை நாள் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : Chennai ,Kanimozhi ,Chennai Day ,Madras ,Chennai… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!