×

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரும் 25, 26ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்

சோளிங்கர் : மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 2 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 1,305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில், பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவை இயங்கி வருகிறது.

ரோப் காரில் மலைக்கு செல்வதற்கு ரூ.50ம் மலையிலிருந்து மீண்டும் இறங்கி வருவதற்கு ரூ.50ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில் மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ரோப் கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 25, 26 ஆகிய 2 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்து வரும் 27ம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ரோப்கார் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Tags : Sholingar ,Lakshmi Narasimha ,Temple ,Lakshmi Narasimha Temple ,Lakshmi ,Narasimha Temple ,Divya Desams ,Sholingar, Ranipet district… ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...