×

விவசாயிகள் கவலை பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிக்கான சமையலர் காலிப்பணி இடங்களுக்கு நேர்காணல்


பெரம்பலூர், டிச.10: பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர்நலத்துறை விடுதி சமையல் பணியாளர் காலி பணியிடங்களுக்கான நேர் காணல் நடக்கிறது. 18 பணி யிடங்களுக்கு 362 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக விடுதிகளில் பணி புரியும் சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் 8, 9, 10ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 2 பெண் சமையலர் மற்றும் 16 ஆண் சமையலர் என மொத்தம் 18 சமையலர் காலிப் பணியிடங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் 800க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் தகுதியான மொத்தம் 362 நபர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 8ம் தேதி 2 பெண் சமை யலர் பணி இடங்களுக்கு 118 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை இயக்குனர் ரூபன் தாஸ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரமணகோபால் முன்னிலையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நபர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஆண் சமையலர் பணி இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 120 நபர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இன்று (10ம் தேதி) தகுதியான 124 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் காலியாக உள்ள 18 விடுதி சமையலர் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Tags : Farmers Anxiety Backward Welfare Home ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய