- அங்கன்வாடி
- பெரம்பலூர்
- தமிழ்நாடு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்
- மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
பெரம்பலூர், ஆக 22: பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டகுழு சார்பாக வழங்க கோரி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக அகில இந்திய கருப்பு தினத்தை முன்னிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார்.
ஜான்சி, அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனம், சாரதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மையப் பணிகளை செய்வதற்கு புதிய செல்போன் 5ஜி சேவைக்கான 5ஜி சிம் கார்டு, மையங் களில் வைபை கனெக்சன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், பணியாளர்களின் தரவுகளை பதிவு செய்யச்சொல்லி கட்டாயப் படுத்துவதை தவிர்க்க வேண்டும் போஷன் ட்ராக்கரில் செய்யும் பணிகளுக்கு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
