×

பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார் 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரி வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் காரைக்காலில் 14ம்தேதி முதல் நடக்கிறது

காரைக்கால், டிச.10: வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த காலதாமதம் செய்வதை கண்டித்து தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெயசிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் கருப்பையா, துணை தலைவர் தேவதாஸ், இணை செயலாளர் பாலசுப்ரமணியன், இணை பொருளாளர் ஜார்ஜ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 6வது ஊதியக்குழு ஊதியத்தை கடந்த 1.7.2016 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். மாத ஊதியத்தை மாத இறுதி வேலை நாளிலேயே வழங்க வேண்டும். பணியின்போது இறந்த 2 ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணியினை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய அலுவலக வாயிலில் வாயிற் கூட்டம், ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு வேலை போராட்டம் மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது. இதுவரை எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 14ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வது என சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Premalada Vijayakand ,implementation ,Agricultural Science Center ,Karaikal ,7th Pay Commission ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...