×

குறைகேட்பு கூட்டத்தில் தாக்குதல் டெல்லி முதல்வருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்​வர் ரேகா குப்தா, தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்றுமுன்தினம் நடத்திய போது, அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யை சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் திடீரென அவரை திட்டி, தலை முடியை பிடித்து இழுத்து கன்​னத்​தில் அறைந்​தார். இதை பார்த்ததும் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய ரிசர்வ் காவல் படையினர் டெல்லி முதல்வருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Delhi ,Chief Minister ,New Delhi ,Rekha Gupta ,Rajesh Chakriya ,Rajkot, Gujarat ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்