×

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் நாளை ( ஆக.22) முதல் செப். 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 – 67,100/- வழங்கப்படும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Uniform Personnel Selection Board ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Police Secondary Guards ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...