- ஒலியமங்கலம்
- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி
- பொன்னமராவதி
- அமைச்சர்
- ரகுபதி
- வினித்குமார்
- ஒலியமங்கலம் வெட்டுக்காடு
- புதுக்கோட்டை மாவட்டம்
- பழனியாண்டி…
பொன்னமராவதி, ஆக.21: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகி உள்ள, பொன்னமராவதி அடுத்த ஒலிமங்களம் மாணவர் வினித்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்ட பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களம் வெட்டுக்காடுவைச் சேர்ந்த ஆசிரியர் பழனியாண்டி மகன் வினித்குமார் நீட் தேர்வி வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, விருக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகி உள்ள மாணவர் வினித்குமாரை தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். அப்போது, திமுக ஒன்றியச்செயலாளர்கள் முத்து, அடைக்கலமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
