- பழனி
- தண்டாயுதபாணி
- சுவாமி
- கோவில்
- திண்டுக்கல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேற்கு கிரி சாலை
- தெற்கு கிரி சாலை
பழநி:தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகின்றன. இந்த ரோப்கார் கடந்த ஜூலை 15ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பின்னர், பெட்டிகளில் பழுது நீக்குதல், இரும்பு கயிறு மாற்றம், ஷாப்ட் இயந்திரம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆக. 18ம் தேதி முதல் ரோப்கார் பெட்டிகளில் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வல்லுநர் குழு ஒப்புதல் அளித்ததால் நேற்று காலை முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக ரோப்கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூசணி உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. பின்னர், ரோப்கார் சேவையை துவக்கி வைத்தார். 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
