- செங்கல்பட்டு
- அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கான சட்ட பிரச்சாரக் குழு
- சென்னை
- அரசு மருத்துவர்களுக்கான சட்ட பிரச்சாரக் குழு
- டாக்டர்
- Manikumar
- பிரவீன்
- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் டாக்டர் மணிக்குமார் மற்றும் குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரவீன் கடந்த 18ம் தேதி திங்கட்கிழமை காலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மிகவும் வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று மருத்துவர்கள் மீது மோதியதில் டாக்டர் மணிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் பிரவீன் படுகாயத்துடன் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அரசு பேருந்து மோதி உயிரிழந்த டாக்டர் மணிக்குமாரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பிரவீனுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
