×

மேட்டுர் அணையின் நீர் மட்டம் 5வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் எல்லையான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 98,000 கன அடியாக நிலவுகிறது.

இதனால் தண்ணீர் ஆர்பரித்து செல்வதால் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது. இதனிடைய நடப்பாண்டில் மேட்டுர் அணையின் நீர் மட்டம் 5 வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடப்பாண்டின் முதல் முறையாகவும் அணையின் வரலாற்றில் 44 வது முறையாகவும் முழுவதுமாக நிரம்பியது. நடப்பாண்டில் ஜூலை 5 ஆம் தேதி 2 வது முறையும் ஜூலை 20ல் மூன்றாவது முறையாகவும் அணை முழு கொள்ளளவு எட்டியது. ஜூலை 25 ஆம் தேதியை தொடர்ந்து இன்று அதிகாலை அணை முழு கொள்ளளவை எட்டியது.

அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் வரத்து குறைக்கப்படுவதால் நீர் வரத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Mettur dam ,Salem ,Cauvery ,Karnataka ,Tamil Nadu ,Okenakkal ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...