×

குஜராத்தில் 10ம் வகுப்பு மாணவன் கொலையால் பதற்றம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவன் கொலையை கண்டித்து அகமதாபாத்தில் பள்ளி முன் உறவினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக 10ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் பள்ளி வாயில் முன் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மாணவன் கொலை செய்யப்பட்டதை அடுத்து பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். பள்ளி வகுப்பறைகளில் இருந்த பொருட்கள், கணினிகளை அடித்து நொறுக்கினர். தனியார் பள்ளி முதல்வர், ஊழியர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Gujarat Gandhinagar ,Ahmedabad, Gujarat ,Ahmedabad ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...