வலங்கைமான், ஆக,20: குடவாசல் அரசு பள்ளியில் ஆர்வத்துடன் பள்ளி தோட்டம் அமைத்த பள்ளி மாணவர்கள். குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக அனைத்து மேல்நிலைப், உயர்நிலைப் பள்ளிகளுக்கு பல விதமான விதைகள் வழங்கப்பட்டது அவற்றை பள்ளியில் மாணவர்கள் குழு அமைத்து தனித்தனியாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி பள்ளி பசுமைப்படை ஆசிரியை நிர்மலாதேவி மாணவர்களை சிறு சிறு குழுவாக பிரித்து தனித்தனி பாத்தியில் விதைகள் காசினாக்கீரை, அரைக்கீரை , மற்றும் முள்ளங்கி ஆகியவை விதைக்கப்பட்டது பசுமைப்பட மாணவர்கள் மற்றும் பள்ளி NSS மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்றார்கள் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் மற்றும் நாட்டு நலப்பள்ளி திட்ட அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கு பெற்றனர்.
