பெரம்பலூர், ஆக. 20: சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசமாக பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் தாளாளர் ராம்குமார் கலந்து கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 200 மாணவ, மாணவிகளுக்கு இலவச பள்ளி சீருடைகளை வழங்கி, நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர் கல்வியில் சேர வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் செய்திருந்தனர்.
