திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்றத்தில் பணி நாட்களில் வழக்கு விசாரணை வழக்கமாக காலை 10.15 மணிக்கு தொடங்கும். நேற்று காலையும் வழக்கம்போல தலைமை நீதிபதி என்.எம். ஜாம்தார் தலைமையிலான அமர்வின் முன்னிலையில் வந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.
அப்போது நீதிமன்ற அரங்கத்திற்குள் கடுமையான துர்நாற்றம் வீசியது. மரநாய் சிறுநீர் கழித்ததால் தான் துர்நாற்றம் வீசுவதாக நீதிமன்ற ஊழியர்கள் கூறினர். இதையடுத்து நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டு துப்புரவு பணி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை துவங்கியது.
