×

தடுப்பூசி போடாததால் விபரீதம் நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதித்து தறித்தொழிலாளி பலி

சேலம்: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம்,இலவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் நாய் ஒன்றை வளர்த்துள்ளார். 3 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள பலரை அந்த நாய் கடித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி வளர்ப்பு நாயை அடிக்க முயன்றுள்ளார்.

அப்போது அவரது காலில் நாய் கடித்துள்ளது. அதற்கு தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். சமீபத்தில் அவர் நாய் போலவே செய்கைகளில் ஈடுபட்டதால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனையில் ரேபிஸ் நோய் பாதித்ததை கண்டறிந்தனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மதியம் குப்புசாமி உயிரிழந்தார்.

Tags : Salem ,Kuppusamy ,Ilavampalayam, Konganapuram, Salem district ,Kuppusamy… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...