×

சிபிசிஐடி எஸ்பி முத்தரசி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: சிபிசிஐடி எஸ்பி முத்தரசி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: சட்டம்- ஒழுங்கு உதவி ஐஜி ஸ்ரீநாதா, சென்னை மாநகர சைபர் க்ரைம் துணை கமிஷனராகவும், தென் மண்டல சிபிசிஐடி எஸ்பி முத்தரசி, சட்டம் -ஒழுங்கு ஏஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிவீரபாண்டியன், காவல்துறை மாநில கட்டுப்பாட்டு அறை எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : CBCID ,Mutharasi ,Chennai ,Home Secretary ,Dheeraj Kumar ,IG ,Srinatha ,Cyber ,Chennai Metropolitan Police ,South Zone… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...