×

பலத்த மழை காரணமாக சென்னை-மும்பை இடையே 2 விமானங்கள் ரத்து

சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை – மும்பை இடையே 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.35 மணியளவில் சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து நேற்று மாலை 6.20 மணியளவில் மும்பைக்கு புறப்பட்டு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அதிகாலை 5.10 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 8.55 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் இருந்து காலை 9.35 மணியளவில் மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், மாலை 3 மணியளவில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமானது.

Tags : Chennai ,Mumbai ,Mumbai, Maharashtra ,Mumbai… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...