- விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு
- ஓசூர்
- செயிண்ட் பீட்டர்
- அருமை
- சிறப்பு
- மருத்துவமனை
- ஏஎஸ்பி
- அக்ஷய் அனில் வாக்ரே
- தீவிர சிகிச்சைப் பிரிவு…
ஓசூர், ஆக.20: ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடந்தது. விழாவில் ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்ரே கலந்துகொண்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கான ஆம்புலன்ஸ் சேவையை, கொடியாசைத்து தொடங்கி வைத்து விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சை உதவி மைய தொடர்பு எண்ணாக 04344-261261ஐ அறிவித்தார். அவர் பேசுகையில், ‘ஓசூர் மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக, தினசரி 2 முதல் 5 வாகன விபத்து மரணங்கள் நிகழ்கின்றன. விபத்து நடக்கும் இடத்தில் உள்ள மக்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை காட்டிலும், விபத்தினை போட்டோ, வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை விரும்புகின்றனர். அவ்வாறு இல்லாமல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார். விழாவில், ஓசூர் தொழில் நிறுவன கூட்டமைப்பு தலைவர் சுந்தரையா, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ராஜமுத்தையா, மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஸ்ஓங்கல், துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அரவிந்த், மார்க்கெட்டிங் மேலாளர் அருண்பிரகாஷ், அட்கோ இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, ஸ்பெஷாலிட்டி பிரிவு மேலாளர் தமிழரசன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
