×

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: மாடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 5வது மாடியில் உள்ள வீட்டில், மிக்சியை ஆன் செய்து பயன்படுத்தியபோது தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மிக்சியில் ஏற்பட்ட தீ விபத்து வீடு முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. 5ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ, 6ஆவது தளம் என அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது.

இதற்கிடையே தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர், தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5வது மற்றும் 6வது மாடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ள அனைத்து வாகனங்களையும் எடுக்குமாறு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Tags : Chennai ,Raja Annamamalaipuram, Chennai ,Raja Annamamalaipuram ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது