×

தாராபுரம் அருகே தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி

 

தாராபுரம், ஆக. 19: தாராபுரம் தளவாய்பட்டிணம் அண்ணா திடலில் திருப்பூர் மாவட்ட கபடி கழகம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், தமிழன் மற்றும் ஜூனியர் தமிழன் கபடி கழகங்களின் சார்பில் தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி நடந்தது. தென்மாநிலத்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஏ.வி.எம். கபாடி அணி வீரர்கள் முதல் பரிசை பெற்றனர்.அவர்களுக்கு ரூ.1 லட்சம் பணம், கோப்பையை சாரா நர்சிங் கல்லூரி நிறுவனரும், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளருமான டாக்டர் ஜெய்லானி வழங்கினார்.

அப்போது தொழிலதிபர் வேலுமணி, அனிதா டெக்ஸ் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
2ம் பரிசான ரூ.75 ஆயிரம், கோப்பையை கேரளாவை சேர்ந்த ஜேகே அகாடமி குழுவினரும், 3ம் பரிசான ரூ.40 ஆயிரம், மற்றும் கோப்பையை தஞ்சை பிரிட்டிஷ் பல்கலைக்கழக அணி வீரர்களும், 4ம் பரிசாக ரூ.40, ஆயிரம் மற்றும் கோப்பையையும் திருப்பூர் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

Tags : South India level 3 ,day Kabaddi ,Tarapuram ,South India ,Kabaddi ,Anna Stadium ,Thalavaipattinam ,Tiruppur District Kabaddi Association ,Tamil Nadu Amateur Kabaddi Association ,Tamilan ,Junior Tamilan Kabaddi Associations.… ,
× RELATED அவிநாசி அருகே பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து