×

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் புயல், மழையால் கணக்கிட முடியாத சேதம்: மத்தியக்குழுவிடம் காஞ்சி எம்பி புகார்

காஞ்சிபுரம்: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்திய குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது. அதில், 2 குழுக்களாக பிரிந்து சேத பாதிப்புகளை பார்வையிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரப்பாக்கம், மேட்டுப்பாளையம், விஷார் உள்பட பல பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது காஞ்சிபுரம் எம்பி செல்வம், மத்தியக் குழுவினரை சந்தித்து மனு அளிததார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் புயல், மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து கணக்கிட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் புயல் மழையால் கிராம சாலைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில்  இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Storm ,districts ,Kanchi ,Chengai ,Central Committee ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு