×

தர்மஸ்தலா விவகாரத்தில் 60 நாளில் எஸ்ஐடி விசாரணை அறிக்கை தரும்: சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பதில்

பெங்களூரு: தர்மஸ்தலா விவகாரத்தில் எஸ்ஐடி 60 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேரவையில் தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது: தர்மஸ்தலா நேத்ராவதி நதிக்கரையில் சடலத்தை புதைத்தேன். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் சடலமும் புதைக்கப்பட்டது என்று தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி ஒருவர் புகார் அளித்தார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சி அளித்த அந்த நபர், எந்தெந்த இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது? என்கிற விபரத்தின் அடிப்படையில் தனி வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. அத்துடன் சில பொருட்கள், மண் மாதிரிகளை சேகரித்துள்ள எஸ்.ஐ.டி. போலீசார் தடயவியல் துறையிடம் அதை ஒப்படைத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவை இன்னும் நடத்தப்பட வேண்டும். எஸ்.ஐ.டி. பரிசோதனை இன்னும் முடியவில்லை. தற்போது தான் தொடங்கி இருக்கிறது. விசாரணை வெளிப்படையாக நடந்து வருகிறது. 60 நாளில் விசாரணை முடிவுகள் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

* 28 பேரை கொலை செய்தாரா சித்தராமையா?
அமைச்சர் பரமேஸ்வர் பேசுகையில், ‘‘, 26,28 பேரை முதல்வர் சித்தராமையா கொலை செய்துள்ளார் என ஒரு நபர் கூறியுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2023 மே 27 அன்று முதல்வருக்கு எதிராக இந்த நபர் பேசியுள்ளார். அதை ஏன் இப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவ்விதம் அவதூறு மற்றும் பொய் புகார் கூறிய நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : SIT ,Dharmasthala ,Home Minister ,Bengaluru ,Parameshwar ,Assembly ,Karnataka Assembly ,Netravati river ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...