- ஜனாதிபதி
- புடின்
- பிரதமர் மோடி
- டிரம்ப்
- புது தில்லி
- விளாடிமிர் புடின்
- மோடி
- அதிபர் டிரம்ப்
- அலாஸ்கா
- ஜனாதிபதிகள்
- அலாஸ்கா, அமெரிக்கா
புதுடெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து விளக்கி உள்ளார். அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த 15ம் தேதி அதிபர்கள் டிரம்ப், புடின் இடையே உச்சி மாநாடு நடந்தது. சுமார் 3 மணி நேரம் இரு தலைவர்கள் பேசிய போதிலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அலாஸ்காவில் நடந்த டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம், அதிபர் புடின் விளக்கம் அளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘எனது நண்பர் அதிபர் புடினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்கா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான அவரது சந்திப்பு குறித்து தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. வரும் நாட்களில் எங்களின் தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்’’ என கூறி உள்ளார்.
