புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை வாங் யீ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜெய்சங்கர் பேசுகையில்,‘‘ இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது.இந்த சந்தர்ப்பம் நமது இருதரப்பு உறவுகளைச் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. உலகளாவிய நிலைமை மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள சில பிரச்னைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது ஒரு பொருத்தமான நேரம். இரு நாடுகளும் இப்போது முன்னேறிச் செல்ல முயல்கின்றன. இதற்கு இரு தரப்பிலிருந்தும் வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவைப்படுகிறது. அந்த முயற்சியில், பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர ஆர்வம் ஆகிய அம்சங்களால் வழிநடத்தப்பட வேண்டும்’’ என்றார்.
