×

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி

கருங்கல், ஆக.19: சுதந்திர தினத்தை முன்னிட்டு தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வினாடிவினா போட்டி நடைபெற்றது. 11 பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசாக கேடயமும் ரூபாய் 10,000/- ரொக்கமும் பெற்று கொண்டது. இரண்டாம் பரிசான ரூபாய் 5,000/- ரொக்கம் மற்றும் கேடயத்தினை கருங்கல் சூசைபுரம் ஏ.பி.ஜே.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர். இந்நிகழ்ச்சியினை அன்னை வேளாங்கண்ணி, கல்லூரி தாளாளர் அருட்தந்தை ஜேசுமரியான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ஜாண்சன் ஏற்பாட்டில் ஆங்கிலத்துறை பேராசிரியை செர்லின் சிஜி தலைமையில் துறைத்தலைவர் மஜோன் ஜோஸ்லின் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீனா தெரசா முன்னிலையில் நடைபெற்றது.

Tags : Annai Velangani College Karangal ,Independence Day ,Telaiavatam ,Annai Velangani College English Department ,St. Susaiper Metric Secondary School ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்