×

பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு

சென்னை: பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு விவகாரத்தை விசாரித்த குழுவே கல்லீரல் விற்பனை புகாரையும் விசாரிக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கல்லீரல் கொடுத்த பெண் தற்போது உடல் பலவீனமாகி எந்த வேலையும் செய்ய முடியாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு கல்லீரல் திருட்டு பற்றி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pallipalayam ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...