×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

டெல்லி: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். 19ம் தேதி முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையை கடக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Delhi ,Indian Meteorological Survey ,IMCI ,Midwest ,northwestern Bengal Sea ,Northwest Bank Sea ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது