- மாவிளக்கு பூஜை
- குலசேகரன்பட்டினம் முத்தராமன் கோயில்
- உடன்குடி
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
- கோவில்
- தசரா
- மைசூர்
உடன்குடி,ஆக.18: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடந்த மா விளக்கு பூஜையில் பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். உலக அளவில் தசராவுக்கு மைசூருக்கு அடுத்தபடியாக பெயர்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் மா விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக் கோயில் நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்காலபூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது.இதைத்தொடர்ந்து இரவு 7.25 மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி வாசனை திரவியங்களால் நடந்த அபிஷேகத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு மஹா தீபாராதனை நடந்தது. நிகழ்வில் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாகப் பங்கேற்ற பெண்கள் மற்றும் பக்தர்கள் குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டனர்.
