- கொள்ளிடம்
- லால்குடி
- அலெக்ஸ் காட்வின்
- கொன்னைகுடி
- திருச்சி மாவட்டம்
- திருச்சி பொன்மலை இரயில்வே
- அன்பில்
- லால்குடி…
லால்குடி, ஆக.18: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திருச்சி பொன்மலை ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை வரும் இவர் திருவிழாவிற்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். இந்நிலையில் லால்குடி அருகே அன்பில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் காட்வின் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கொள்ளிடம் ஆற்றை பார்வையிட சென்றனர்.
அங்கு, ஆற்றில் குளித்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி அலறினர். இதை பார்த்த காட்வீன் துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றி விட்டு இவர் நீரில் மூழ்கினார். அப்போது, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காட்வினை காப்பாற்றி, 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
