- உலக யானைகள் தின உறுதிமொழி ஏற்பு விழா
- திருத்துறைப்பூண்டி
- அரசு
- பள்ளி
- உலக யானைகள் தின உறுதிமொழி ஏற்பு
- காட்டிமேடு
- திருவாரூர் மாவட்டம்
- எம்.எஸ். பாலு
- உலக யானை நாள்
திருத்துறைப்பூண்டி, ஆக.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசுப் பள்ளியில் உலக யானை தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு ச பாலு தலைமை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானை தினத்தை கொண்டாடுவேன்,
காலநிலை மாற்றத்துக்கு எதிராக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பேன், என் தாயின் பெயரில் குறைந்தது ஒரு மரம் நட்டும் என் தாய் பூமியை பாதுகாப்பேன் என் யானை என் பாரம்பரியம் என்ற உறுதி மொழியை மாணவி அபிநிஷா வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

