பெரம்பலூர், ஆக.18: பாளையம், குரும்பலூர் பகுதிகளில் இன்று (18ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று பெரம்பலூர் உதவி செயற் பொறியாளர் (கிராமியம்) பொன் சங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் பகுதியிலுள்ள 110 கிலோ வாட் துணைமின் நிலையத்தில், இன்று (18ஆம் தேதி) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மங்கூன் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய கிராமங்களான பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர்,
இலாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மா பாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணாபாடி, கீழக்கனவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
