- பெரம்பலூர்
- மாவட்ட கலெக்டர்
- அருண்ராஜ்
- பெரம்பலூர் மாவட்டம்
- 79 வது சுதந்திர தினம்
- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர், ஆக. 18: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் உருவ படங்களுக்கு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மின் விளக்குகளால், பூக்களால் அலக்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் உருவபடங்களுக்கு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ், மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொ) வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக் குமார் உள்ளிட்ட அலுவலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் தியாகிகளின் உருவபடங்களைப் பா ர்வையிட்டு, அவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
