சென்னை: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்ைக குழு (டிட்டோஜாக்) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, டிட்டோஜாக் அமைப்பினருடன் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
குறிப்பாக பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவதை பிரதான ேகாரிக்கையாக வைத்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்திலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்தது. அதன் ெ தாடர்ச்சியாக ஆக.22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் டிட்டோஜாக் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து டிக்டோஜாக் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்த தொடக்க கல்வித்துறை அழைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 14ம் தேதி நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தொடக்க கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றனர்.
