அமைச்சர் வேலுமணி தகவல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை,டிச.9: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகை அவுரி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயத்தை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தமிழ்நாடு விவசாய சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில் திருமருகல் தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட கவுன்சிலர் சரபோஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அரசு ஊழியர் சங்கம்: அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராஜீ தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்பனது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல்

நன்றி கூறினார்.

Related Stories:

>