×

24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 77,043 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.53 கோடி காணிக்கை செலுத்தினர்.

தொடர் விடுமுறை காரணமாக ஏழுமலையான் கோயிலில் இன்று பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் கோகர்பம் அணை அருகே உள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupathi Elumalayan Temple ,Swami ,Temple Undiyal ,
× RELATED மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி...