- பாஜக
- கனிமொழி
- ஆர்.என்.ரவி
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- தேசிய குற்ற பதிவு பணியகம்
- இந்தியா
- உத்திரப்பிரதேசம்
- மகாராஷ்டிரா
- ராஜஸ்தான்.…
சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்.
மூன்றுமே பாஜ ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு, அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜ தலைவராகவா. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
