×

இந்தியா மீதான 50% வரி விதிப்புதான் புடின் பேச்சுவார்த்தைக்கு வர காரணம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்நிலையில், அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு முன்னதாக, டிரம்ப் அளித்த பேட்டியில், ‘அனைத்து செயலுக்கும் ஒரு தாக்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் உங்கள் (இந்தியா) மீது வரி விதிப்போம் என்று கூறியபோது, அது அவர்களை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக தனது இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளரை ரஷ்யா இழந்து வருகின்றது. இதன் எதிரொலியாக அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் சந்திப்பதற்கு விரும்பினார்கள்.

அந்த சந்திப்புக்கான அர்த்தம் என்னவென்று பார்ப்போம். சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் எண்ணெயை அதிகம் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. சீனாவுக்கு மிக அருகில் சென்றது. தனது முக்கிய வாடிக்கையாளர்களை இழக்கும்போது அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ‘அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதன் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், பொருளாதார காரணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Tags : India ,Putin ,US ,President Trump ,Washington ,Russia ,U.S. ,President ,Vladimir Putin ,Anchorage, Alaska ,Trump ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...