×

பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

பெரம்பலூர், ஆக.15: :பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று (15ம் தேதி) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags : TASMAC ,Perambalur district ,Perambalur ,District ,Collector ,Arunraj ,Tamil Nadu State Commerce Corporation ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...